Saturday, September 1, 2012

ராங் நம்பர்

அதிசயமாக, பஸ் உடனே வந்தது. கூட்டமாக இல்லையென்றாலும் உட்கார  இடமில்லை போல் தெரிந்தது. தவறு. ஒரு இடமிருந்தது. கடைசி வரிசையில். டிக்கெட்டை அவசரமாக வாங்கி கொண்டு, சீட்டை நோக்கி விரைந்தேன். 


அமர்ந்தேன். பெருமூச்சு விட்டுக்கொண்டே, வாக்மேனை தேடினேன். எடுத்துவராமல் போனதற்கு மனதிற்குள் என்னை திட்டிகொண்டேன். 

"தண்ணி இருக்கா?" அருகில் இருந்து ஒரு குரல். 
கொடுப்பதற்காக பையைத் திறந்தேன். அவள் உள்ளே  எட்டிப் பார்த்தாள். 
சே! என்ன decency இல்லாம... என்று நினைத்து கொண்டே அவளைப் பார்த்தேன். 
வயது 30௦ இருக்கும். முதிர்ந்த முகம். அவள் மூக்கில் சளி காய்ந்த அடையாளங்கள் இருந்தன. 

பாட்டிலை வாங்கி கொண்டு, "ஒரு தேங்க்ஸ் கூட இல்ல?!" என்று மனதிற்குள் நினைத்து கொண்டே, ஜன்னல் வழியாக ரோட்டைப் பார்க்க தொடங்கினேன். 

"உங்களுக்கு job  vacancy  எதாவது தெரியுமா?" திரும்பவும் அவள். 
" job ஆ.... ம்ம் ...எந்த மாதிரி?"
"டெலி-calling போல"

அவளைப் பார்த்தால் சுறுசுறுப்பாகவும், சாமர்த்தியமாகவும், வேலை செய்பவள் போல் தெரியவில்லை. 
"இப்ப எனக்கு எதுவும் தெரியல. உங்க நம்பர் கொடுங்க, தெரிய வந்தால் கால் பண்றேன்." 
"என் போன் வேலை செய்யல. உங்க நம்பர் கொடுங்க. நான் ரெண்டு நாள் கழிச்சு பேசறேன்," என்றாள். 

இது என்னடா வம்பா போச்சு! சரி, தப்பா நம்பர் தருவோம், தெரியவா போகுது, என்று ஏதோ ஒரு நம்பர் கொடுத்தேன். 

அவள் பையிலிருந்து, ஒரு பேனா எடுத்து கையில் வைத்திருந்த newspaper  இல் note செய்தாள். அது ஒரு classified பேப்பர். அங்கங்கே நம்பர் இருந்தன. அவள் எழுதுகையில் அவளை பார்த்தேன். துப்பட்டவிற்க்கும், சுடிதாற்கும் சம்மந்தமில்லை. கையில் கருப்பு கயிறு, காதிலும், கழுத்திலும் ஒன்றும் இல்லை.  Interview விற்கோ வேலை  சம்பந்தமாகவோ  செல்பவள் போல் தெரியவில்லை. 

"நீங்க வேலை பார்க்கிறீங்களா?" 
"ஆமா." 
"எங்கே?"
சொன்னேன். "எவ்வளவு சம்பளம்?"
வேண்டுமென்றே குறைத்து சொன்னேன். எதனால் பொய் சொன்னேன் என்று தெரியவில்லை. "கல்யாணம் ஆச்சா"
அவள் கேள்வி கேட்டுகொண்டே போனாள், நானும் பொய்யும், உண்மையும் கலந்து சொல்லிகொண்டிருந்தேன். 

மனதிற்குள் வாக்மன் எடுக்காமல் வந்ததிற்கு மறுபடியும் திட்டிகொண்டேன்,  புலம்பினேன். 

"உங்க போன் use பண்ணிக்கலாமா?" என்று கேட்டாள் அடுத்து. 
நம்பர் ஐ கேட்டு டச்சித்துக் கொடுத்தேன். 

"ரௌண்ட்டானா வந்துட்டேன் சார். இன்னும் 5  நிமிஷம் வந்துடுவேன்," பேசி கொடுத்தாள். 
இப்பவும் ஒரு தேங்க்ஸ் இல்ல..

அவள் பையினுள் பேனாவையும் பேப்பரையும் வைத்து இறங்க தயாரானாள். அப்பொழுது தான் கவனித்தேன். 
அவள் திறந்த அந்த மஞ்சள் படிந்த வெள்ளை பிளாஸ்டிக் பை நிறைய  classified ads உள்ள newspapers. குறைந்தது 20௦ இருக்கும். அதில் ads highlight செய்ய பட்டிருந்தன . பல phone numbers எழுதபட்டிருந்தன. எனக்கு தூக்கி வாரிபோட்டது. Ego இல்லாமல் சொல்ல வேண்டுமென்றால் மனசு கனத்தது.

அவள் சீட்டை விட்டு எழுந்தாள். 
"ஒரு நிமிஷம்." கூப்பிட்டேன். 
"இந்தாங்க என் விசிட்டிங் கார்டு வைத்துக்கொள்ளுங்கள். நான் முன்பு கொடுத்த நம்பர் வொர்க் ஆகலன்னா இதுல இருக்க நம்பர் கூப்பிடுங்கள்."  

"தேங்க்ஸ்" என்று சொல்லி இரங்கினாள்... 

7 comments:

Eugene said...

Hey, "It happens all the time" kinda story. good. most of us have this prejudice(i guess) idea on any notion usually, even though we intend not to. this is one classic example.hmmm... but i know a little secret here.. ha ha ha... :)

ஒளியோன் said...

Wow.. This is very good. Don't know about woman but I have seen many men in the train. Different varieties too. Keerthana... is this your true encounter!? Perfectly narrated! Thanks for sharing!

Kit said...

Eugene: Thanks for your comments.
@Oli: Thank you. Yes, it is. One of my such encounters. Please translate it to Geeta :)

Siva said...

அருமை! தோற்றத்தை வைத்து நமக்குஏற்படும் முன் அனுமானங்கள் பலமுறை தவறாக ஆவது உண்டு.
இது ஒரு எளிய... நல்ல உதாரணம்...

வாழ்த்துக்கள்....தொடர்ந்து எழுதவும்!

Unknown said...

படித்ததும் புரிந்து கொண்டேன் என்று நினைத்தேன். ஆனால், Eugene/Siva பின்னூட்டங்களைப் பார்த்ததும் குழம்பி விட்டேன். எதுக்கும் அந்தப் பொண்ணு நம்பர் கொடுங்க. உண்மை என்னன்னு நேரடியா கேட்டுத் தெரிஞ்சுக்கறேன் :)

Siva said...

Subi, நான் இப்ப தான் குழம்ப ஆரம்பிச்சிருக்கேன்...Ha ha :)

Keer,Success started here for your story :) Good!

Kit said...

Hey Subi and Siva,

Thanks for your comments! Subi, endha number venum.. right number or wrong number?